Tuesday, November 2, 2010

பச்சை பயிறு ஒரு உருண்டை


பச்சை பயிறு - 2டம்ளர்
பச்சரிசி-1\2 டம்ளர்
சர்க்கரை - 1டம்ளர்
ஏலக்காய்-15
நெய்-தேவைக்கு

செய்முறை;
பச்சை பயிறு சிவக்க வறுக்கவும் நெய் தவிர மற்றவற்றை மிசினில் நைசாக அரைக்கவும் தேவையான போது நெய் சூடு படுத்தி மாவில் ஊற்றி உருண்டை பிடிக்கவும் .

Friday, October 29, 2010

தேன்குழல்


புழுங்கல் அரிசி - 11\2 டம்ளர்
உளுந்து - 1 டம்ளர்
சர்க்கரை - 4 டம்ளர்
எண்ணெய் - பொரிப்பதற்கு
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை;
முதலில் அரிசியை 1 மணிநேரம் தனியாக ஊறவைக்கவும். உளுந்தை 1\2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் அதிகம் விடாமல் கெட்டியாக நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும் அதற்குள் பக்கத்து அடுப்பில் பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் ஏலக்காய் தூள் போட்டு அடுப்பை அணைக்கவும் எண்ணெய் காய்ந்தவுடன் முறுக்கு அச்சில் மாவை போட்டு எண்ணெய்யிலேயே பிழியவும் .வெந்ததும் சர்க்கரை பாகில் நன்கு நனைத்து உடனே எடுத்து தனியாக தட்டில் வைக்கவும்.(குறிப்பு ;சர்க்கரை பாகு சூடாக இருக்கவும் ஆறிவிட்டால் ஒரு துளி தண்ணீர் விட்டு சூடு படுத்திக்கலாம். 

Monday, October 11, 2010

பயித்தம்பருப்பு ஸ்வீட்

பயித்தம்பருப்பு-1\4கிலோ சிவக்கவறுத்தது
சர்க்கரை-1கிலோ
நெய்-1\2கிலோ
முந்திரி-1\4கப்
ஏலப்பொடி-சிறிது
செய்முறை;
பருப்பை குக்கரில் குழையவேகவைத்து அதிக நீரை வடித்துவிட்டு அத்துடன் சர்க்கரை சேர்த்து நெய் ஊற்றி நன்கு கிளறி நெய்யில் வறுத்த முந்திரி,ஏலப்பொடி போட்டு நன்குகிளறி பதம் வந்ததும் இறக்கிவிடவும்.
குறிப்பு; அல்சருக்கு மிகச்சிறந்த மருந்து. ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக இதை தினமும் 50கிராம் அளவு சாப்பிட்டால் குண்டாகலாம்.

கல்கண்டு சாதம்;


பச்சரிசி-1டம்ளர்
கல்கண்டு-1\4கிலோ
நெய்-1கப்
முந்திரி,சாரைபருப்பு,பாதாம் பருப்பு தலா-1\4கப்
ஏலக்காய் தூள்-1\2டீஸ்பூன்
குங்கும பூ-சிறிது
செய்முறை;
பச்சரிசியை கழுவி ஊறவைத்து குக்கரில் 3டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்.விசில் அடங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து குக்கர் சாதத்தில் கல்கண்டு,நெய்,நெய்யில் வறுத்த பருப்புவகைகள் ஏலக்காய் தூள் போட்டு நன்குகிளறி பாலில் கரைத்த குங்கும பூ ஊற்றி கிளறி இறக்கவும்.

Saturday, October 9, 2010

சிக்கன் போன்டா


தேவையானவை
எலும்பு இல்லாத சிக்கன்-1கிலோ
கார்ன் ஃபிளார்-2கைப்பிடி
அரிசிமாவு-3கைப்பிடி
கடலைமாவு-4கைப்பிடி
ரெட் சில்லி பவுடர்,உப்பு-தேவைக்கு
தனியாதூள்-2டீஸ்பூன்
கரம் மசாலா தூள்-1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1\2கப்
கறிவேப்பிலை,கொத்தமல்லி நறுக்கியது-1\2கப்
இஞ்சி,பூண்டு பேஸ்ட்-2டீஸ்பூன்
ஆயில்-பொரிக்க
செய்முறை;
ஆயில் தவிர மற்றவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து ஆயிலில் பொரிக்கவும்.

Friday, October 8, 2010

உருளைகிழங்கு வடை


தேவையானவை
உருளைகிழங்கு-1\2கிலோ
இஞ்சி,பச்சைமிளகாய்,சோம்புவிமுது-2டீஸ்பூன்
அரிசிமாவு-தேவைக்கு
புதினாபொடியாக நறுக்கியது-2கப்
ஆயில்,உப்பு-தேவைக்கு

செய்முறை;
உருளைகிழங்கை வேகவைத்து நன்றாகமசிக்கவும்.இத்துடன் ஆயில் தவிரமற்றவற்றை சேர்த்து பிசைந்து வடையாக தட்டி ஆயிலில் பொரிக்கவும்.

வெடி தேங்காய்

இந்த ரெசிபி சேலம் ஸ்பெஷல் ஆடி முதல்நாள் அங்கு எல்லோர்வீட்டிலேயும் செய்வார்கள்.
வெடி தேங்காய்
தேவையானவை;
தேங்காய்-1
பச்சைபயிறு-1\4கப்
வறுத்த எள்-1டீஸ்பூன்
பொட்டுகடலை-1டீஸ்பூன்
வெல்லதுறுவல்-1\4கப்
அவல் அல்லது அரிசி-1\4கப்
மைதா-சிறிது

செய்முறை;
தேங்காயை சுத்தம் செய்து குடுமியை எடுத்து விட்டு தேங்காயை வெறும் தரையில் நன்கு தோய்க்கவேண்டும். தேங்காயின் ஒரு கண்ணை துவாரம் செய்து இளநீரை முற்றிலும் எடுத்துவிட்டு துளையின் வழியாக பொட்டுகடலை,பச்சைபயிறு, அரிசி,எள்,வெல்லம் கலந்து தூவரத்தில் போட்டு இடையில் இளநீரை ஊற்றவும். மைதா மாவை தண்ணீர்விட்டு பிசைந்து துவாரத்தை மூடிவிடவும். கரிஅடுப்பில் தேங்காயின்மேல் ஓடுவெடிக்கும் வரைசுடவும். இல்லையெனில் குறைந்த தீயில் கேஸ்அடுப்பிலும் சுடலாம்.
குறிப்பு; சேலத்தில் அழிஞ்ஞிகுச்சியில் ஒருபக்கம் கூர்மையாக சீவி துவாரத்தில் குத்தி சுடுவார்கள்.