Friday, October 29, 2010

தேன்குழல்


புழுங்கல் அரிசி - 11\2 டம்ளர்
உளுந்து - 1 டம்ளர்
சர்க்கரை - 4 டம்ளர்
எண்ணெய் - பொரிப்பதற்கு
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை;
முதலில் அரிசியை 1 மணிநேரம் தனியாக ஊறவைக்கவும். உளுந்தை 1\2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் அதிகம் விடாமல் கெட்டியாக நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும் அதற்குள் பக்கத்து அடுப்பில் பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் ஏலக்காய் தூள் போட்டு அடுப்பை அணைக்கவும் எண்ணெய் காய்ந்தவுடன் முறுக்கு அச்சில் மாவை போட்டு எண்ணெய்யிலேயே பிழியவும் .வெந்ததும் சர்க்கரை பாகில் நன்கு நனைத்து உடனே எடுத்து தனியாக தட்டில் வைக்கவும்.(குறிப்பு ;சர்க்கரை பாகு சூடாக இருக்கவும் ஆறிவிட்டால் ஒரு துளி தண்ணீர் விட்டு சூடு படுத்திக்கலாம். 

Monday, October 11, 2010

பயித்தம்பருப்பு ஸ்வீட்

பயித்தம்பருப்பு-1\4கிலோ சிவக்கவறுத்தது
சர்க்கரை-1கிலோ
நெய்-1\2கிலோ
முந்திரி-1\4கப்
ஏலப்பொடி-சிறிது
செய்முறை;
பருப்பை குக்கரில் குழையவேகவைத்து அதிக நீரை வடித்துவிட்டு அத்துடன் சர்க்கரை சேர்த்து நெய் ஊற்றி நன்கு கிளறி நெய்யில் வறுத்த முந்திரி,ஏலப்பொடி போட்டு நன்குகிளறி பதம் வந்ததும் இறக்கிவிடவும்.
குறிப்பு; அல்சருக்கு மிகச்சிறந்த மருந்து. ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக இதை தினமும் 50கிராம் அளவு சாப்பிட்டால் குண்டாகலாம்.

கல்கண்டு சாதம்;


பச்சரிசி-1டம்ளர்
கல்கண்டு-1\4கிலோ
நெய்-1கப்
முந்திரி,சாரைபருப்பு,பாதாம் பருப்பு தலா-1\4கப்
ஏலக்காய் தூள்-1\2டீஸ்பூன்
குங்கும பூ-சிறிது
செய்முறை;
பச்சரிசியை கழுவி ஊறவைத்து குக்கரில் 3டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்.விசில் அடங்கியதும் அடுப்பை சிம்மில் வைத்து குக்கர் சாதத்தில் கல்கண்டு,நெய்,நெய்யில் வறுத்த பருப்புவகைகள் ஏலக்காய் தூள் போட்டு நன்குகிளறி பாலில் கரைத்த குங்கும பூ ஊற்றி கிளறி இறக்கவும்.

Saturday, October 9, 2010

சிக்கன் போன்டா


தேவையானவை
எலும்பு இல்லாத சிக்கன்-1கிலோ
கார்ன் ஃபிளார்-2கைப்பிடி
அரிசிமாவு-3கைப்பிடி
கடலைமாவு-4கைப்பிடி
ரெட் சில்லி பவுடர்,உப்பு-தேவைக்கு
தனியாதூள்-2டீஸ்பூன்
கரம் மசாலா தூள்-1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம்-1\2கப்
கறிவேப்பிலை,கொத்தமல்லி நறுக்கியது-1\2கப்
இஞ்சி,பூண்டு பேஸ்ட்-2டீஸ்பூன்
ஆயில்-பொரிக்க
செய்முறை;
ஆயில் தவிர மற்றவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து ஆயிலில் பொரிக்கவும்.

Friday, October 8, 2010

உருளைகிழங்கு வடை


தேவையானவை
உருளைகிழங்கு-1\2கிலோ
இஞ்சி,பச்சைமிளகாய்,சோம்புவிமுது-2டீஸ்பூன்
அரிசிமாவு-தேவைக்கு
புதினாபொடியாக நறுக்கியது-2கப்
ஆயில்,உப்பு-தேவைக்கு

செய்முறை;
உருளைகிழங்கை வேகவைத்து நன்றாகமசிக்கவும்.இத்துடன் ஆயில் தவிரமற்றவற்றை சேர்த்து பிசைந்து வடையாக தட்டி ஆயிலில் பொரிக்கவும்.

வெடி தேங்காய்

இந்த ரெசிபி சேலம் ஸ்பெஷல் ஆடி முதல்நாள் அங்கு எல்லோர்வீட்டிலேயும் செய்வார்கள்.
வெடி தேங்காய்
தேவையானவை;
தேங்காய்-1
பச்சைபயிறு-1\4கப்
வறுத்த எள்-1டீஸ்பூன்
பொட்டுகடலை-1டீஸ்பூன்
வெல்லதுறுவல்-1\4கப்
அவல் அல்லது அரிசி-1\4கப்
மைதா-சிறிது

செய்முறை;
தேங்காயை சுத்தம் செய்து குடுமியை எடுத்து விட்டு தேங்காயை வெறும் தரையில் நன்கு தோய்க்கவேண்டும். தேங்காயின் ஒரு கண்ணை துவாரம் செய்து இளநீரை முற்றிலும் எடுத்துவிட்டு துளையின் வழியாக பொட்டுகடலை,பச்சைபயிறு, அரிசி,எள்,வெல்லம் கலந்து தூவரத்தில் போட்டு இடையில் இளநீரை ஊற்றவும். மைதா மாவை தண்ணீர்விட்டு பிசைந்து துவாரத்தை மூடிவிடவும். கரிஅடுப்பில் தேங்காயின்மேல் ஓடுவெடிக்கும் வரைசுடவும். இல்லையெனில் குறைந்த தீயில் கேஸ்அடுப்பிலும் சுடலாம்.
குறிப்பு; சேலத்தில் அழிஞ்ஞிகுச்சியில் ஒருபக்கம் கூர்மையாக சீவி துவாரத்தில் குத்தி சுடுவார்கள்.

சிக்கன் மிளகு வருவல்

சிக்கன் மிளகு வருவல்
சிக்கன்-1கிலோ,
தேங்காய்துருவல்-1\2கப்,
சின்னவெங்காயம்1\2கப்,
தக்காளி-2
பெரியவெங்காயம் 2நீளமாகநறுக்கியது,
மிளகு-1\4கப்
உப்பு,ம.தூள்-தேவைக்கு
பட்டை-4,
லவங்கம்-4,
ஏலக்காய்-2,
சோம்பு-சிறிது,
கீறிய பச்சைமிளகாய்-2, 
ஆயில்-200கிராம்,
செய்முறை; சிக்கனை கழுவி சுத்தம் செய்யவும். தேங்காய்துருவல்,பட்டை2, லவங்கம்2, சோம்பு, சின்னவெங்காயம், தக்காளி1,மிளகு சேர்த்து அரைத்து கொள்ளவும். இரும்புவாணலியில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம்,ஏலக்காய் தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் தக்காளி கீறிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி கோழியை சேர்த்து நன்குகிளறி ம.தூள்,உப்பு சேர்த்து அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து நன்குகிளறி 1டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்.அடிக்கடி கிளறிவிடவும். சாதத்திற்கு, சப்பாத்திக்கு என்றால் வெந்து கெட்டுயானவுடன் இறக்கிவிடவும். இன்னம் சற்று நேரம்வறுத்தால் ரசம்சாதத்திற்கு சாப்பிட நன்றாக இருக்கும்.
 பாதாம் பிஸ்தா குல்ஃபி
தேவையானவை; 
        
      திக்கான கிரீம்-ஒரு கப்,பால்-ஒரு லிட்டர், பிரெட் ஸ்லைஸ்-2, சர்க்கரை-ஒரு கப்,முந்திரி,பாதாம்,பிஸ்தா (எல்லாம் சேர்த்து உடைத்தது)-கால் கப். 
செய்முறை;
      
      பாலை அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். பால் நன்றாகக் கொதித்து பாதியாகக் குறைந்ததும் ,சர்க்கரை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். நன்றாக ஆறவிடவும். மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து  மிக்ஸியில் லேசாக அடித்துக்கொள்ளவும். சிறிய பானை வடிவிலான குல்ஃபி அச்சுகளில் ஊற்றி,ஃப்ரீஸரில் முதல் நாளிரவே வைத்து விடவும். மறுநாள் நன்றாக செட் ஆகி, சாப்பிட பிரமாதமாக இருக்கும்.

-நன்றி ''அவள் விகடன் ஏப்ரல் 27,2007''

திருவாதிரை களி

தேவையானவை:
புழுங்கல் அரிசி-2 டம்ளர்
வெல்லம்-500கிராம்
நெய்-250கிராம்
தேங்காய் துருவல்-2கப்
முந்திரி-100கிராம்
திராட்சை-100கிராம்
ஏலக்காய் தூள்-1டீஸ்பூன்.

செய்முறை; அரிசியை 1மணிநேரம் ஊறவைத்து இட்லி மாவு பதத்திற்கு நைசாக அரைக்கவும். பாத்திரத்தில் வெல்லம் தூள் செய்து அதில் போட்டு கரைந்ததும் வடிகட்டி தேங்காய் துருவல் சேர்த்து (இதில் நெய் சிறிது ஊற்றினால் கொதிவரும் போது அடிபிடிக்காது.) பிறகு அரைத்த மாவை ஊற்றி நன்கு கிளறவும். அவ்வபோது நெய் சிறிது ஊற்றி 3/4 மணிநேரம் கைவிடாமல் கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய்யில் வருத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும். இந்த களியை முதல் நாள் இரவு செய்து மறுநாள் சாப்பிடசுவை நன்றாக இருக்கும்.

குறிப்பு: மார்கழி மாத திருவாதிரை நட்சதிரத்தன்று இதை சிவனுக்கு பிரசாதமாக செய்வார்கள்.

உளுந்து கஞ்சி

உளுந்து -1டம்ளர் ,அரிசி-1|4 டம்ளர், முற்றிய தேங்காய்த் துருவல் -2கப் சுக்கு ,ஏலக்காய்தூள் -1டீஸ்பூன், வெல்லம் -350 கிராம் ,தண்ணீர்-2லிட்டர் ,
செய்முறை; உளுந்தையும் ,அரிசியும் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும் தணியாக தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தூளை போட்டு
கரைந்ததும் வடிகட்டி வேறு பாத்திரத்தில் ஊற்றி கொதிவிடவும் . நன்கு கொதிவரும்போது தேங்காயை கொட்டி அரைத்த மாவை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் கிளரவும்.20 நிமிடம் நன்கு கிளறி
கஞ்சி பதத்திற்கு வந்ததும் சுக்கு, ஏலக்காய்த் தூள் போட்டு பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்.

சந்தவை



புழுங்கள் அரிசி -2டம்ளர்
செய்முறை அரிசியை ஊறவைத்து இட்லி பதத்திற்கு அரைக்கவும் உப்பு ஒரு சிட்டிகை கலந்து இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக வேகவைத்து எடுத்து சந்தவை மணையில் பிழியவும் எல்லா மாவையும் இதே மாதிரி செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
1.இனிப்பிற்கு வெல்லம் 300 கிராம் வறுத்த எள் 100 கிராம் பொட்டுக்கடலை 100 கிராம்
செய்முறை வெல்லத்தை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி கொண்டு எள்ளையும் பொட்டுக்கடலையும் மிக்ஸியில் சிறிது சர்க்கரையுடன் பொடி செய்து கொள்ளவும் சந்தவை பொடி செய்து வெல்லம் பாகு கலந்து சாப்பிடலாம்
2.காரத்திற்கு;வெங்காயம்-1,ப.மிளகாய்-2,கடுகு,கடலைபருப்பு,உ.பருப்பு,கறிவேப்பிலை,கொத்தமல்லி தேவைக்கு லெமன்-பாதிஅளவு,எண்ணெய்,ம.தூள் சிறிது, உப்பு தேவைக்கு .
வெங்காயம் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக்கொண்டு வானலியில் எண்ணை ஊற்றி கடுகு கல்ல பருப்பு உளுத்தம் பருப்பு போட்டு சிவந்த தும் கறிவேப்பிலை போட்டு ம.தூள் உப்பு சேர்த்து கிளறி சந்நவையை போட்டு நன்குகிளறி கடைசியில் லெமன் பிழிந்து நன்கு கிளறி இறக்கவும்.
3.வாணலியில் நெய்சிறிது ஊற்றி தேங்காய்துருவல் 1கப் போட்டு கிளறி சர்க்கரை தூவி முந்திரிசிறிது நெய்யில் வறுத்து போட்டு கிளறி இறக்கவும்.
நெய் பர்பி
தேவையாணவை;
கடலைமாவு-1கப்;சர்க்கரை-2கப்;நெய்-2கப்;தேங்காய்துருவல்-1கப்;நெய்யில் வருத்த முந்திரி-1\2கப்
செய்முறை; கனமான வாணலியில் நெய்1\4கப் ஊற்றி கடலைமாவை பச்சைவாசனை போகும்வரை வறுத்து தனியாகவைக்கவும்.அதேவாணலியில் சர்க்கரை போட்டு தண்ணீர் முழுகும் அளவு ஊற்றிகரைந்ததும் நெய்யில் வறுத்தகடலைமாவை சிறிதுசிறிதாக போட்டுகட்டியில்லாமல் கிளறி தேங்காய்துருவல் சேர்க்கவும். நன்கு கிளறிநெய் ஊற்றவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது வருத்தமுந்திரி சேர்த்து தாம்பாளத்தில் ஊற்றி ஆறியதும் வில்லைகள் போடவும்.

சாக்லேட்


தேவையாணவை; கண்டன்ஸ்டு மில்க்-2கப்;சர்க்கரை-2டீஸ்பூன்;பட்டர்-250கிராம்;கோகோ பவுடர்-4டீஸ்பூன்;
செய்முறை; கனமான வாணலியில் கண்டன்ஸ்டு மில்க்,சர்க்கரை,பட்டர்,கோகோபவுடர் எல்லாவற்றையும் ஒன்றாககொட்டி நன்குகிளறவும்.எல்லாம்சேர்ந்து நெய்பிரிந்து வரும் சமயத்தில் டிரேயில் ஊற்றி ஆறியதும் வில்லைகள் போடவும்.
குறிப்பு;கண்டன்ஸ்டுமில்க் செய்ய; பால் 5கப்,சர்க்கரை 1கப்;
செய்முறை;கனமான வாணலியில் பால்,சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சி இட்லிமாவு பதம்வந்தவுடன் இறக்கி ஆறவிடவும்.ஆறியதும் மிக்ஸியில் விப்பரில் வைத்து ஒரு சுற்றுசுற்றி ஒரு பாக்ஸில் ஊற்றி மூடிவைக்கவும்

முந்திரி பக்கோடா


தேவையானவை
முந்திரி - 1\4கிலோ
கடலைமாவு - 100கிராம்
புதினா -1கைப்பிடி, 


(இஞ்சி,பச்சைமிளகாய்,சோம்பு)
அரைத்த பேஸ்ட்-2டீஸ்பூன்
அரிசிமாவு - 3டீஸ்பூன்
ஆயில் - தேவைக்கு
உப்பு

செய்முறை;ஆயில் தவிர மற்றவற்றை சிறிது தண்ணீர்விட்டு கெட்டுயாக பிசைந்து ஆயிலில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.