Friday, October 8, 2010

சிக்கன் மிளகு வருவல்

சிக்கன் மிளகு வருவல்
சிக்கன்-1கிலோ,
தேங்காய்துருவல்-1\2கப்,
சின்னவெங்காயம்1\2கப்,
தக்காளி-2
பெரியவெங்காயம் 2நீளமாகநறுக்கியது,
மிளகு-1\4கப்
உப்பு,ம.தூள்-தேவைக்கு
பட்டை-4,
லவங்கம்-4,
ஏலக்காய்-2,
சோம்பு-சிறிது,
கீறிய பச்சைமிளகாய்-2, 
ஆயில்-200கிராம்,
செய்முறை; சிக்கனை கழுவி சுத்தம் செய்யவும். தேங்காய்துருவல்,பட்டை2, லவங்கம்2, சோம்பு, சின்னவெங்காயம், தக்காளி1,மிளகு சேர்த்து அரைத்து கொள்ளவும். இரும்புவாணலியில் ஆயில் ஊற்றி காய்ந்ததும் பட்டை,லவங்கம்,ஏலக்காய் தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் தக்காளி கீறிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி கோழியை சேர்த்து நன்குகிளறி ம.தூள்,உப்பு சேர்த்து அத்துடன் அரைத்த விழுதை சேர்த்து நன்குகிளறி 1டம்ளர் தண்ணீர் விட்டு வேகவிடவும்.அடிக்கடி கிளறிவிடவும். சாதத்திற்கு, சப்பாத்திக்கு என்றால் வெந்து கெட்டுயானவுடன் இறக்கிவிடவும். இன்னம் சற்று நேரம்வறுத்தால் ரசம்சாதத்திற்கு சாப்பிட நன்றாக இருக்கும்.

2 comments:

  1. சிக்கன் மிளகு வருவல் பார்த்தும் சாப்பிட ஆசை நிங்க எங்க வீட்டுக்கு வந்து செய்து தரவேண்டும்

    ReplyDelete
  2. செய்துபார்த்தேன்.மிக நன்றாக இருந்தது.சூப்பர்.எனக்கு நண்டு வருவல் செய்ய ஒரு டிப்ஸ் த்ந்து உதவுங்கள்.THANK YOU

    ReplyDelete